Sunday, 16 September 2012


இந்தியா சார்பாக நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரியவர்கள்

1) ரவீந்திரநாத் தாகூர்
இந்தியாவின் பிரபல எழுத்தாளராகவும்,கவிஞராகவும் விளங்கிய குருதேவ் எனபிரபல்யமாக அறியப்படுகின்றரவீந்திரநாத் தாகூர் அவர்கள் கீதாஞ்சலிஎன்ற தனது கவிதைத் தொகுப்புக்காக1913ம் ஆண்டு இலக்கியத் துறைக்கானநோபல் பரிசினை பெற்றுக்கொண்டார்.ரவீந்திரநாத் தாகூர் அவர்களே நோபல்பரிசினை பெற்றுக்கொண்ட முதல் ஆசியநாட்டவர் என்ற பெருமைக்குரியவர்ஆவார்.

இந்தியா மற்றும் பங்களாதேஸ் நாடுகளின் தேசிய கீதத்தினைஇயற்றிய பெருமைக்குரியவரும் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர்ஆவார்.


2) சந்திரசேகர வெங்கட் ராமன்
தமிழ்நாடு திருநெல்வேலியைப்பிறப்பிடமாகக் கொண்ட ராமன் மெட்ராஸ்அரசாங்க பாடசாலையில் கல்விகற்றதுடன்,கல்கத்தா பல்கலைக்கழகத்தில்பெளதிகவியல் பேராசிரியராகவும்பணியாற்றினார்.சேர் C.V. ராமன் 1930ம்ஆண்டு பெளதிகவியல் துறைக்கான நோபல்பரிசினை பெற்றுக்கொண்டார்.ஒளித்துறையில் முக்கியமானஆராய்ச்சிகளை மேற்கொண்டமைக்காக பேராசிரியர் ராமனுக்குநோபல் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவரின்கண்டுபிடிப்பானது “ராமன் விளைவு" என அழைக்கப்படுகின்றது.
நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் தமிழர் என்றபெருமை சேர் C.V. ராமன் அவர்களைச் சாரும்.


3) ஹர்கோவிந்த் கொரானா
டாக்டர் ஹர்கோவிந்த் பஞ்சாப், ராய்ப்பூரில்(தற்போதைய பாகிஸ்தான்) பிறந்தார்.இரசாயனவியல் கலாநிதிப் படிப்புக்காகஅமெரிக்கா சென்ற ஹர்கோவிந்த்அமெரிக்காவில் குடியுரிமைபெற்றுக்கொண்டார்.
1968ம் ஆண்டு மருத்துவவியல் துறைக்கான நோபல் பரிசினைபெற்றுக்கொண்டார். மனித நிறமூர்த்த குறியீடுகள் தொடர்பானஆராய்ச்சிக்காக டாக்டர் ஹர்கோவிந்த் நோபல் பரிசுபெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



4) அன்னை திரேசா
அல்பேனியாவை பிறப்பிடமாகக்கொண்ட அன்னை திரேசா கிறிஸ்தவகன்னியாஸ்திரியாக 1929ம் ஆண்டுஇந்தியாவை வந்தடைந்து தனதுமுதல் ஆசிரியப் பணியைகல்கத்தாவில் ஆரம்பித்தார். அவரது20வருட கல்கத்தா ஆசிரியப் பணிஅவரின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. இந்தியாவின்வறுமைக்குள் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தைமேம்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். 1948ல்இந்திய குடியுரிமையை பெற்றுக்கொண்ட அன்னை,இந்தியாமுழுவதும் திருச்சபையிலான் தொண்டு நிறுவனங்களைஆரம்பித்து தொண்டாற்றினார். அன்னையின் சேவையினைஉணர்ந்த நோபல் குழு 1979ம் ஆண்டுக்கான சமாதான நோபல்பரிசினை வழங்கியது. முதலில் அதை மறுத்த அன்னைஏழைகளில் ஏழைகளுக்காக அதை ஏற்றுக்கொள்வதாகக் கூறிஏற்றுக்கொண்டார்.



5) சுப்பிரமணியன் சந்திரசேகர்
மெட்ராஸ் அரசாங்க பாடசாலையில் கல்விகற்ற டாக்டர் சந்திரசேகர் பின்னர் தனதுவேலைகளுக்காக அமெரிக்கா சென்றதுடன்அங்கே தங்கி ஆராய்ச்சிகளைமேற்கொண்டார்.
டாக்டர் சந்திரசேகர் 1983ம் ஆண்டு வானவியல் தொடர்பானதன்னுடைய ஆய்வுக்காக பெளதிகவியல் துறைக்கான நோபல்பரிசினை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்வானவியல் தொடர்பான ஏராளமான நூல்களையும்எழுதியுள்ளார்.

டாக்டர் சந்திரசேகர் , சேர் C.V. ராமனுடைய உறவினர் என்பதும்குறிப்பிடத்தக்கது.



6) அமெர்த்தியா சென்
பேராசிரியர் அமெர்த்தியா சென்பொருளாதார நோபல் பரிசினைபெற்றுக்கொண்ட முதல் ஆசிய நாட்டவர்என்ற பெருமைக்குரியவர் ஆவார்.பேராசிரியர் அமெர்த்தியா சென் சிறந்தவிரிவுரையாளருமாவார். பொருளாதாரக்கொள்கைகள்-வறுமை,ஜனநாயகம்,அபிவிருத்தி,சமூக நலன்தொடர்பான பகுதியில் சிறந்த முறையில்பணிகளை மேற்கொண்டமைக்காகபேராசிரியர் அமெர்த்தியா சென் 1998ம் ஆண்டு பொருளாதாரதுறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டமைகுறிப்பிடத்தக்கது.



7) வெங்கட் ராமன் இராமகிருஸ்ணன்
1952ம் ஆண்டு தமிழகத்திலுள்ள பிறந்த இவர்அமெரிக்காவின் ஒகியோ பல்கலைக்கழகத்தில்1976ம் ஆண்டு பெளதிகவியலில் டாக்டர் பட்டம்பெற்றார். 1982ல் அமெரிக்க குடியுரிமையப்பெற்றுக் கொண்ட இவர் கேம்பிரிட்ஜிலுள்ளஎம்.ஆர்.சி ஆய்வகத்தில் விஞ்ஞானியாககடமையாற்றுகின்றார்.

மரபணுக் குறியீடுகளில் றைபோசோம்களின் பங்கு குறித்தஇவரின் ஆராய்ச்சிக்காக 2009ம் ஆண்டு இரசாயனவியல்துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார்.

நோபல் பரிசினை பெறும் 3வது தமிழர் டாக்டர்இராமகிருஸ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment