Saturday, 18 August 2012

ரசிகன்


மலராகப் பூத்தவள்
இலையாக உதிர்கிறாள் காதலுடன்.
நீராக வந்தவள்
வேரக வளர்கிறாள் நட்புடன்.

பூங்காற்றாய் நீ வரவே
இந்த பூங்கா ஏங்கியது..
கனவாக நீ வரவே
எந்தன் இமைகள் தூங்கியது..
ஆறுதல்கள் தந்தால் என்ன
அழுகை வருகிறது......

♥நீ என்னருகில்
இல்லாத போதில்
உன் நினைவில்
மூழ்கி நிக்கும்
என் உள்ளத்தின்
ஓசை உனக்கு
ஓர் அழகிய
கவிதையடி...! ♥

நீ தூக்கி வீச காதல் காய்ந்த சருகானதோ..!!!உன் காதல் என் வசமாகும் வரை காத்திருப்பேன்
என் உள்ளத்து காதலுடன் சாகும் வரை..............!!!

♥ ஜீவனே...
நீ மறப்பதை மறந்து
நினைப்பதை நினைத்து
என்னிடம் திரும்பி வருவாயென
ஏக்கத்துடன் வழி மேல் விழி வைத்து
எதிர் பார்த்து காத்துக்கிடக்கின்றேன் என்செல்லமே ! ♥

நான் உன் வாழ்க்கையை
காயப்படுத்தியவள் தான்
என்றாலும் என் வார்த்தை
உன்னை காயப்படுத்தியிருந்தால்
மன்னித்து விடு !

நெருங்கி வருகிறேன்
விலகிச் செல்கிறாள்
விலகிச் செல்கிறேன்
நெருங்கி வருகிறாள்
நிழலாய் என்னவள்!


நான் திரும்பி வரத பயணம் என் மரணம்

நான் விரும்பத பயணம் உன் பிரிவு..!




கவிதை சொல்ல
வந்தேன் உன்னிடம்..
ஆனால் ஒரு நிமிடம்
ஊமையாய் நின்றேன்..
நீ கவிதை எழுதும் அழகை பார்த்து....

கண்முன் தெரியும் காற்றில்
என்னைத் தேடிப் பார்க்காதே~
உன் மூச்சுக் காற்றாய்
உன்னுள்ளேயே நான்~
உடனிருந்தால் உயிராக
... பிரிந்திருந்தால் நினைவாக
என்றும் உன்னுடன் நானிருப்பேன்
உன்னுயிர்த் தோழியாக~~~{Q}

அழகான நாட்கள்
ஆழமான நட்புடன்
இனிமையான பொழுதுகள்
ஈரமான அன்புடன்
உரிமையான சண்டைகள்
... ஊஞ்சலாடிய கனவுகள்
ஐயமில்லா ஒற்றுமை
எண்ணிலடங்கா நினைவுகள்
ஏமாற்றமான தருணங்கள்
ஒருமையான உறவுகள்
ஓசையில்லா அழுகைகள்
ஒளவை உரைத்த கல்வியுடன்
கலந்து போன நட்பினை
எது வந்தாலும் பிரிக்க இயலாது
காற்றில் கலந்த நீரைப்போல~~~{Q}

தூர நின்று பார்க்கிறேன்
விலகிப்போக அல்ல
தூரம் துயரமாகிவிடக்கூடாது
என்ற எண்ணத்தில்~

... வார்தைகளில் வழுக்குகிறேன்
மௌனமாய்ப்போக அல்ல
வார்த்தை வாதமாகிவிடும்
என்ற அச்சத்தில்~

ஆனாலும்

எழுத்துளியால்
செதுக்கினேன்
நட்பெனும் சிற்பத்தை
ஆம்
விழியின் ஓவியமாய்~

நட்பே நட்பை
உணரவேண்டுமென்பதற்க்காக~

சிறகுகளாய் என்னில் முளைத்த நட்பு

சில கணங்கள் அசைய மறந்தாலும்

உங்கள் நினைவுகளை நான் துறந்தாலும்
...
மரிப்பேன்

வாழ்க்கைக்கு மட்டும் காரணம் அல்ல

உங்கள் நட்பு

நான் வாழவும் காரணமாய் உங்கள் நட்பு

இன்றும் வாழ்கிறேன் உங்கள் நட்பின்

நினைவுகளோடு~~~{Q}

இதை உணர்ந்தவர் பலர்
காதல்...
பேசும் மொழி
மௌனம்!!!!

... என்றால்;

தனிமையில் காதல்...
பேசும் மொழி
கண்ணீர்!!!!!

சோகத்தில் இன்பம் :-
நீயும் நானும் சென்றபாதையில்.,
நான் மட்டும் செல்கிறேன்..
நீயும் வருகிறாய்...
நிஜத்தில் இல்லை நினைவாக...!